கல் உப்பைப் பயன்படுத்தி தீய ஆற்றல்களை அழித்தல். ஒரு பாத்திரத்தில் கல்லுப்பு, மலை உப்பு (இந்துப்பு), அல்லது கல்லுப்பைக் கரைத்த தண்ணீரை வைத்துக் கொள்ள வேண்டும். ஹீலர் தன் கைகளால் பாதிக்கப்பட்டவரின் உடலை (scan) ஸ்கேன் செய்து, தீய ஆற்றல் தேங்கி இருக்கும் பகுதியைக் கண்டறிய வேண்டும்.
தீய ஆற்றல் சேர்ந்திருக்கும் உடல் பகுதியைக் கண்டறிந்த பிறகு, ஹீலர் தனது வலது கரத்தை பயன்படுத்தி, அந்த தீய ஆற்றலைப் பிடிக்க வேண்டும். (தீய ஆற்றலை உணரும், மற்றும் பிடிக்கும் வழிமுறை ஹீலர் வகுப்பில் அறிந்துகொள்ளலாம்). பிடிபட்ட தீய ஆற்றலை உப்பில், அல்லது உப்பு கலந்த நீரில் அழிக்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் ஸ்கேன் செய்து முழுமையாக தீய ஆற்றல் நீங்கி விட்டதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை மற்றவர்களுக்குச் சிகிச்சை அளித்த பிறகும், கைகளை கல்லுப்பிலோ கல்லுப்பு கரைத்த தண்ணீரிலோ கழுவிக் கொள்வது நல்லது. இதன் மூலம் தீய ஆற்றல்கள் ஹீலர் மீது அண்டாமல் தவிர்க்க முடியும்.
Leave feedback about this