ஊறுகாய் உடலுக்கு நன்மையானதா? உடலின் இயக்கத்துக்கு ஆறு சுவைகளும் தேவைப்படும். ஆனால் பழைய கஞ்சியை அல்லது சுடுகஞ்சியை உட்கொள்ளும் போது அதில் எந்த சுவையும் இருக்காது. அதனால் தான், காரம், புளிப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு மற்றும் கரிப்பு சுவைகள் கலந்த ஊறுகாயை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.
இன்று நாம் உட்கொள்ளும் சமைத்த உணவுகளின் பெரும்பாலான சுவைகள் கிடைத்துவிடுகின்றன. சமைத்த உணவுகளுடன் ஊறுகாயை சேர்த்துக் கொண்டால், நாம் உட்கொள்ளும் சுவைகளின் அளவு அதிகரித்துவிடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா?
ஊறுகாயை மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும், அல்லது அதைத் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.


Leave feedback about this