இரவில் உறங்குவதும் பகலில் உறங்குவதும் சமமாகுமா?
இரவு உறக்கமும் பகல் உறக்கமும் நிச்சயமாக ஒன்றாகாது. இரவில் உறங்கும் போது மட்டுமே உடலால் முழுமையாக கழிவுகளை வெளியேற்றவும் நோய்களைக் குணப்படுத்தவும் முடியும். இரவில் உறங்கும் போது மட்டுமே உடலுக்குத் தேவையான முக்கியமான சுரப்பிகள் சுரக்கின்றன, அதே நேரத்தில் இரவு தூக்கத்தில் மட்டுமே உடல் தனது பழுதடைந்த உறுப்புகளை சரிசெய்து கொள்கிறது.
இரவு உறக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அத்தியாவசியமானது. இரவில் உறங்கினால் மட்டுமே, உடல் உறுப்புகள் சீராக இயங்கும், கழிவுகள் முழுமையாக வெளியேறும், உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
இரவு உறக்கம் சரியாக இல்லையென்றால் உடலிலும் மனதிலும் பல்வேறு வகையான தொந்தரவுகள் உண்டாகும்.