தியானம் செய்யும் போது எந்த முத்திரையைப் பயன்படுத்தலாம்? அவரவர் உடல் மற்றும் மன அமைப்புக்கு ஏற்ப தியான முத்திரையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. இணையதளங்களில் தியான முத்திரைகளின் படங்களைத் தேடிப் பார்த்து அவற்றை தியானம் செய்யும்போது பயன்படுத்திப் பாருங்கள்.
எந்த முத்திரையைப் பயன்படுத்தும் போது, உங்கள் மனம் விரைவில் அமைதியடைகிறதோ, மனம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதோ, அந்த முத்திரையை தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது.
தியானமும் மனமும் பக்குவப்படும் வரையில் ஒரே முத்திரையைப் பயன்படுத்துவது நல்லது. மனமும் தியானமும் பக்குவப்பட்டப் பிறகு ஒரே முத்திரையை தொடர்ந்து பயன்படுத்தாமல், இடத்திற்கும், சூழ்நிலைக்கும், தேவைக்கும், ஏற்ப தியான முத்திரைகளை மாற்றிக் கொள்ளலாம்.
சில வருட தியான பயிற்சிகளுக்குப் பிறகு, சைவம், வைணவம், பௌத்தம், சமணம், போன்ற மதங்களின் தெய்வ சிலைகள் பிடிக்கும் தியான முத்திரைகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
Leave feedback about this