கோவிட்-19 குணமான அனுபவம்
கோவிட்-19 குணமான அனுபவம். ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், மலேசியாவில் என் உறவினர் ஒருவர் என்னைத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு, கொரோனா தொற்றின் அறிகுறிகள் என்று கூறப்படும் அத்தனையும் ஒரு வாரமாக என்னிடம் இருக்கின்றன. வீட்டில் பிள்ளைகளும் பெரியவர்களும் இருப்பதனால் நான் வீட்டுக்குச் செல்லாமல் வெளியில் தங்கியிருக்கிறேன். கொரோனா தொற்றாக இருக்குமோ என்று அச்சமாக இருக்கிறது. மருத்துவமனைக்குச் செல்லலாமா வேண்டாமா? என்ற குழப்பத்துடன் இருக்கிறேன். இந்த உடல் உபாதைகளைச் சரிசெய்யும் மருந்து ஏதாவது உள்ளதா? என்று கேட்டார்.