வயதானவர்களுக்கு உண்டாகக்கூடிய நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு உண்டாகக்கூடிய நோய்கள்.
1. கண்களின் பார்வை மங்கும்
2. காதுகளின் கேட்கும் திறன் குறையும்
3. ஞாபக மறதி உண்டாகும்
4. பற்கள் பலம் இழக்கும்
5. மூச்சுவிட சிரமம் உண்டாகும்
6. சாப்பாடு முறையாக ஜீரணமாகாது
7. மலச்சிக்கல் உண்டாகும்
8. கை கால்களில் வலிகள் உண்டாகும்
9. இடுப்பு வலி உண்டாகும்
10. கால் வலி, கால் பாத வலி உண்டாகும்
11. நடக்க, நிற்க சிரமமாக இருக்கும்
12. சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்
13. மலம் கழிப்பதில் சிரமங்கள் தோன்றும்
14. இரவில் தூக்கம் பிடிக்காது
15. சர்க்கரை நோயும், இரத்தக் கொதிப்பும் உண்டாகும்
16. உடலில் மேலும் பல வகையான நோய்களும் தொந்தரவுகளும் உண்டாகும்.
இவ்வாறு, எந்தப் பன்னாடையாவது கூறினால் கண்டிப்பாக நம்பாதீர்கள். வயதானால் நோய் உண்டாக வேண்டும் என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது.
“பிறப்பும், முதுமையும், இறப்பும், மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் நோயும் துன்பமும் அவரவர் வாழ்க்கை முறையைப் பொறுத்தது”
என்பது புத்தரின் வாக்கு
உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும் அது உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது. உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை காலமும் பயன்படுத்தவே வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் எவனாவது வயதானால் அந்த நோய் உண்டாகும், இந்த நோய் உண்டாகும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்.
உங்கள் கூடவே வாழும் விலங்குகளைப் பாருங்கள். மரணம் வரும் வரையில் தன் வேலைகளைத் தானே செய்துகொள்கிறன. எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்துக் கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையும், நாயும் படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் ஜலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரையில் ஆரோக்கியமாக வாழ்கின்றன. சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்துகொள்கிறது.
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய் உண்டாகும், இயலாமை உண்டாகும் என்று நம்புகிறார்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழத் தொடங்குகிறார்கள்.
நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
- முதுமை என்று எதுவுமே கிடையாது
- நோய்கள் என்று எதுவுமே கிடையாது
- இயலாமை என்று எதுவுமே கிடையாது
இவை அனைத்தும் உங்கள் மனதிலும், உங்கள் கற்பனையிலும் தான் உள்ளன. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க முதுமை வரும், முதுமை உண்டானால் நோய் உண்டாகும். முதுமை என்பது வலியும் வேதனையும் நிறைந்தது என்று மனிதர்களின் மனதில் விசத்தைக் கலக்கிறார்கள், அவற்றை நம்பாதீர்கள்.
சிந்தனையை மாற்றுங்கள், நான் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வேன் வாழ்கிறேன் என்று நம்புங்கள். எல்லாத் தொந்தரவும் பறந்து போகும். வாழும்போது ஆரோக்கியமாக வாழுங்கள் மரணம் வந்தால் மகிழ்ச்சியாக விடை பெற்றுச் செல்லுங்கள். நல்லதே நடக்கும், சந்தோசம்.


Leave feedback about this