Description
ரெய்கி கலையில், தியானமும் சுய-சிகிச்சையும் (self healing) மிகவும் முக்கியமான தினசரி பயிற்சிகளாகும். இவற்றை ஒழுக்கத்துடன் தினமும் பயிற்சி செய்து வந்தால் உடல் மற்றும் மனதின் உபாதைகள் நீங்கும், ஆரோக்கியம் மேம்படும். தனிநபர், குடும்பம், தொழில், பொருளாதாரம், சமுதாயம், என அனைத்து நிலைகளிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுய-சிகிச்சை செய்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன், ஹீலிங் தெரியாதவர்கள் கூட எளிதாக புரிந்துக்கொண்டு பின்பற்றும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நூலில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பயிற்சி செய்துவந்தால், உடலின் பாதிப்புகள், மனதின் பாதிப்புகள், குடும்ப பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள், வாழ்வியல் பாதிப்புகள், மற்றும் அனைத்து வகையான தொந்தரவுகளும் நீங்கி நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.
கூடிய விரைவில் இந்நூலில் உள்ள பயிற்சிகள் எனது குரலில் காணொளிகளாக நமது யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும். அவற்றைக் காண விருப்பமுள்ளவர்கள் நமது யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். நான் எழுதிய பல நூறு கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் நமது இணையதளங்களில் உள்ளன அவற்றையும் வாசித்து பயன்பெறவும்.