Holisticrays

நாம் வழங்கும் பயிற்சி வகுப்புகளின் கட்டணங்கள் எதனால் மலிவாக உள்ளன?

ரெய்கி, அக்குபஞ்சர், மலர் மருத்துவம், ஈர்ப்பு விதி, தாரோட் கார்ட் ரீடிங், என பல வகுப்புகளை நமது இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் நடத்தியுள்ளோம். அவற்றில் பல நூறு நபர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர். மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது, நாம் நிர்ணயிக்கும் கட்டணம் மிகவும் மலிவாக உள்ளன என்று பல நபர்கள் கருத்து தெரிவித்தனர்.

பல ஆயிரங்களும் இலட்சமும் கட்டணமாகச் செலுத்தி கலந்து கொண்ட வகுப்புகளில் எங்களுக்கு கிடைக்காத மன திருப்தியும் புரிதலும் உங்கள் வகுப்புகளில் கிடைத்தன என்று பலர் பாராட்டினர். பாராட்டிய மற்றும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

ஆரோக்கியம், ஆன்மீகம், தன்முனைப்பு, குழந்தை வளர்ப்பு, பெண்களின் முன்னேற்றம், வியாபார நுணுக்கங்கள், இணைய வியாபாரம், இணையப் பாதுகாப்பு, என பல இலவச வகுப்புகளையும் நடத்தியுள்ளோம். ஒரு முறை இலவச ரெய்கி வகுப்பு கூட நடத்தினோம், மார்ச் மாதம் இலவச அக்குபஞ்சர் வகுப்புக்கும் திட்டமிட்டுள்ளோம்.

இலவசமாக நடத்துவதாலும், குறைவான கட்டணங்களை நிர்ணயிப்பதனாலும் எங்கள் வகுப்புகள் எந்த வகையிலும் தரத்தில் குறைவதில்லை. ஒவ்வொரு வகுப்பிலும், கட்டணத்தையும் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ளாமல், முழு மனதுடன் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எங்கள் வகுப்புகளில் கலந்துகொண்ட பெரும்பாலான நபர்கள் முழு திருப்தி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

மற்ற இடங்களில் இருபதாயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப் பட்ட வகுப்புகளை நாங்கள் மூவாயிரம் ரூபாய்க்கு நடத்துகிறோம். அறுபதாயிரம் வரை வசூலிக்கப்படும் வகுப்புகளுக்கு நாங்கள் ஐயாயிரம் கட்டணமாக வசூலிக்கிறோம். இதை அறிந்தே தான் செய்கிறோம். குறைவாக கட்டணம் வசூலிப்பதாலும், பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாலும், சிலர் எங்களை பிழைக்கத் தெரியாத நபர்கள் என்றும் அன்பாக விமர்சித்தார்கள்.

உண்மையில் நாங்கள் பிழைக்கத் தெரியாத நபர்களும் அல்ல ஏமாளிகளும் அல்ல. எங்களுக்கும் கீழே உள்ள, முழு கட்டணம் செலுத்த முடியாத அடித்தட்டு மக்களும் எங்களின் பயிற்சிகளின் மூலமாக பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் அத்தனை வகுப்புகளையும் முடிந்த வரையில் மலிவாகவும், அனைவரும் செலுத்தக் கூடிய குறைந்த கட்டணத்தில் நடத்துகிறோம்.

ஆரோக்கியம், ஆன்மீகம், தன்முனைப்பு, குழந்தை வளர்ப்பு, பெண்களின் முன்னேற்றம், வியாபார நுணுக்கங்கள், போன்ற அனைவருக்கும் தேவையான; அதாவது ஏழைகளுக்கும் குறைந்த அளவு கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நபர்களுக்கும் இந்த அறிவு சென்றடைய வேண்டும் என்பதற்காக அவற்றை இலவசமாக நடத்துகிறோம்.

இந்த உலக வாழ்க்கைக்கு பணம் மிகவும் அவசியம் தான், ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து. இறைவனின் படைப்பில் அத்தனை மனிதர்களும் உயர்வான உன்னத வாழ்க்கையை வாழ வேண்டும். தன்னை உணர்ந்து பிறப்பின் நோக்கத்தைப் பூர்த்தி செய்து பலன் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இவ்வாறு செயல்படுகிறோம்.

“எங்களின் மனமும், நோக்கமும் உலக இன்பங்களில் மயங்கி பிறழாமல் எல்லாம் வல்ல இறைவன் எங்கள் அனைவரும் பாதுகாத்து, எல்ல உயிர்களுக்கும் பயன்தரக்கூடிய மனிதர்களாக வாழ ஆசிர்வதித்து வழிகாட்ட வேண்டும்” என்று எல்லாம் வல்ல இறைவனையும் அத்தனை குருமார்களையும் வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.

கலந்துகொண்ட மாணவர்களின் கருத்துக்களில் சிலவற்றை இங்கு வாசிக்கலாம்.

ராஜா முகமது காசிம்

 

0 comments on “நாம் வழங்கும் பயிற்சி வகுப்புகளின் கட்டணங்கள் எதனால் மலிவாக உள்ளன?

  1. நன்றி ஐயா.தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும், நடைமுறையில் செயல்படுத்த கூடிய எளிய வழிகளை எங்களுக்கு சொல்லி தருவதற்க்கு நன்றிகள் கோடி🙏🙏

Leave a Reply

Shopping Cart
There are no products in the cart!
0
X