அண்ட சராசரங்களையும், அகில உலகங்களையும், அதன் படைப்புகளையும் படைத்த எல்லாம் வல்ல பரம்பொருளின் அனுமதியுடனும், உதவியுடனும் தொடங்குகிறேன். இந்த இணையதளத்தைஉருவாக்க மற்றும் அதில் எழுத, எனக்கு வழிகாட்டியாக இருந்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கே புகழ்கள் அனைத்தும்.

ரெய்கி எனும் அற்புத கலையைக் கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்டு இந்த இணையதளத்துக்கு வந்திருக்கும் உங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

ரெய்கி என்பது பத்தோடு பதினொன்றாக கற்றுக் கொள்ளக் கூடிய சாதாரணமான கலையல்ல. அதே நேரத்தில் இந்த கலையை பணம் செய்யும் மந்திர வித்தையென சிலர் நினைக்கிறார்கள் அதுவும் தவறு. இது ஒரு வாழும் காலை மட்டுமே, இதைக் கொண்டு அதை அடையலாம், இதை அடையலாம் என்று கூறுவதெல்லாம் வியாபார நோக்கங்களுக்காகச் செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள் மட்டுமே.

இந்த கலையை முழுமையாக அறிந்து உணர்ந்து முறையாகப் பயிற்சிகள் செய்யும் போது உங்களுக்குள் பல மாறுதல்களை நீங்களே உணரலாம். உங்கள் வாழ்க்கை மாறும், சிந்தனை மாறும், வாழ்க்கையின் நிலையும் தரமும்மாறும். நீங்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழலாம்,உங்களைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பல உதவிகளைப் புரியலாம்.

எனது கட்டுரைகளை ஒருமுறைக்குப் பலமுறை மீண்டும் மீண்டும் வாசியுங்கள். அதன் உள்ளடக்கங்களையும் கருத்துகளையும் உள்வாங்கிக் கொள்ளுங்கள். ஏதாவது சந்தேகங்கள் அல்லது கேள்விகள் தோன்றினால் கீழே பதிவு செய்யுங்கள்.

ராஜா முகமது காசிம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X