வால்நட் மலர் மருந்து

வால்நட் மலர் மருந்து (Walnut), வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்கொள்ளும் நபர்களுக்கும், புதிய சூழலுக்கு ஏற்ப மாறத் தயங்கும் நபர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கியப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வால்நட் மலர் மருந்தின் குணாதிசயங்கள்

வால்நட் குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள், வாழ்க்கையில் திருமணம், வேலை மாற்றம், இடமாற்றம், போன்ற மாற்றங்களை எதிர்கொள்ள தயங்குவார்கள். பழைய பழக்கங்கள் மற்றும் உறவுகளில் இருந்து விடுபடத் தயங்குவார்கள்.

மற்றவர்களின் கருத்துக்களால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். மாற்றங்களால் மனதில் தெளிவு இல்லாமல் இருப்பார்கள். தங்கள் விரும்பும் மாற்றங்களை வெளிப்படுத்த தயங்கும் நபர்களாக இருப்பார்கள்.

வால்நட் மலர் மருந்தின் பயன்கள்

வால்நட் மலர் மருந்து மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், புதிய சூழலுக்கு ஏற்ப மாறவும் உதவுகிறது. பழைய விசயங்களில் இருந்து வெளியே வந்து, புதிய வாழ்க்கையை தொடங்கவும் உதவுகிறது.

தன்னம்பிக்கையை அதிகரித்து, தனது சொந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. மனதில் தெளிவை ஏற்படுத்தி, சரியான முடிவுகளை எடுக்க துணை புரிகிறது. உணர்வுகளை வெளிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த மலர் மருந்து, வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், புதிய சூழலுக்கு ஏற்ப மாறவும் உதவுகிறது.

Leave feedback about this

  • Rating