உன் முகம் கூட முழுமையாக
என் மனதில் பதியும் முன்னே
அயல்நாட்டில் கால் பதித்தேன்
நாலு காசு சேர்க்க – நாலு
கடல் தாண்டி வந்தேன்
கொஞ்சம் கஷ்டங்களுடனும்
நிறைய நினைவுகளுடனும்
நாட்களைக் கடத்தி வந்தேன்
நாளைக்குத் தேவைப்படும்
என்ற எண்ணத்துடன்
இன்றைய வாழ்க்கையை
அடகு வைத்தேன்
நமக்காக நாம் வாழ
பெறும் செல்வம் தேவையில்லை
அடுத்தவனிடம் பேர் வாங்க
வாழ்க்கையையே அடகு வைத்தேன்
ஊருக்காக ஒரு வாழ்க்கை
உறவுக்காக ஒரு வாழ்க்கை
பெயருக்காக ஒரு வாழ்க்கை
கற்பனையில் ஒரு வாழ்க்கை
நிகழ்காலத்தை விற்று
முதுமைக் காலத்தை
வாங்குவதுதான் வாழ்க்கையா?
அடுத்தவன் திருப்திக்குத்தான்
நான் வாழ வேண்டுமென்றால்
எதுக்குடா இந்த வாழ்க்கை?