வயது அதிகரிக்கும் போது கண் பார்வை மங்கிவிடுமா?
வயது அதிகரிப்பதால் யாருக்கும் கண் பார்வை மங்காது. நம் உடலின் உறுப்புகள் அனைத்தும் பிறந்த நாள் முதலாக, இறுதி நாள் வரையில் பயன்படுத்தவே வழங்கப்பட்டுள்ளன.
ரசாயனங்கள் கலந்த உணவையும், பானங்களையும், பொருட்களையும், மருந்துகளையும் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கண் பார்வை மங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
உணவு முறையையும், வாழ்க்கை முறையையும், சரியானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைத்துக் கொண்டால் வாழ்வின் இறுதி நாள் வரையில் கண் பார்வை தெளிவாக இருக்கும்.