மனிதர்களின் வாழ்க்கையில் எதனால் ஏற்ற தாழ்வுகள் உருவாகின்றன? மனிதப் பிறவிக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அதிக வேற்றுமைகள் உள்ளன. மற்ற எந்த உயிரினத்துக்கும் தன் வாழ்க்கையை தனது விருப்பம் போல வாழும் உரிமைக் கிடையாது. தனக்கு எது வேண்டும் வேண்டாம் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையும் மற்ற உயிரினங்களுக்குக் கிடையாது.
மனிதனுக்கு மட்டும், தன் வாழ்க்கையை தனது விருப்பம் போல் அமைத்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளதால்; அவன் வாழும் காலங்களில் அறியாமையினால் பல தவறுகளைச் செய்துவிடுகிறான்.
இந்த உலக வாழ்க்கையும், மனித பிறப்பும் ஆன்மாவுக்கு பயிற்சியாக இருப்பதனால்; அவன் செய்யும் தவறுகளை திருத்துவதற்காக அவன் செய்த பாவப் புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்பில் ஏற்ற தாழ்வுகள் உருவாகின்றன.
Leave feedback about this