வாழ்க்கை முழுவதும் போராட்டமாக இருப்பது ஏன்? பலாப்பழத்தின் மேற்புறத்தில் சொரசொரப்பாக அழகின்றி இருந்தாலும் உள்ளே இனிப்பான சுவையான பழம் இருக்கும். பலாப்பழத்தைத் திறந்து பார்க்காமல் அதன் தோலையே வேடிக்கைப் பார்ப்பதைப் போன்று. வாழ்க்கையில் எது நடந்தாலும் ஏன் நடக்கிறது? அதன் நோக்கம் என்ன? என்று சிந்திக்காமல் அந்த நிகழ்வுகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பதால் வாழ்க்கை போராட்டமாகத் தெரிகிறது.
எந்த மனிதனின் வாழ்க்கையும் முழு நேர போராட்டமாக இருக்காது. கண்டிப்பாக அந்த மனிதன் தனது துன்பங்களில் இருந்து வெளிவந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அனைத்து வாய்ப்புகளையும் இயற்கை வழங்கும். அவன் அதனை சரியாக கவனித்து புரிந்துக் கொண்டு செயல்பட்டால் விருப்பப்படி வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம்.
Leave feedback about this