ஆரோக்கியம்

உறக்கத்தில் உண்டாகும் குறைபாடுகள்

உறக்கத்தில் உண்டாகும் குறைபாடுகள். சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும், உறங்குவதின் அளவு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் சிறுவர்களின் உடல் தூங்காமலேயே சக்தியை விரைவாக உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றலுடன் இருக்கும், முதியவர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும், உடல் உழைப்பு குறைவாக இருப்பதனால் சக்தி விரயம் இல்லை, அதனால் சக்தி உற்பத்தியின் தேவையும் இல்லை. இந்தக் காரணங்களால் தான் அவர்களின் உறக்கத்தின் அளவும் குறைகிறது.

உறக்கம் குறைவாகத் தேவைப்பட்டால், உடலில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம் கிடையாது, மாறாக உடலில் சக்தி அதிகமாக இருக்கிறது அல்லது உடல் விரைவாக சக்தியை உற்பத்தி செய்து கொள்ளும் ஆற்றலுடன் இருக்கிறது என்று பொருளாகும். குறைவாக உறங்குபவர்கள் தான் ஆரோக்கியமான மனிதர்கள்.

ஆரோக்கியமான உறக்கத்தின் கால அளவு

ஒவ்வொரு மனிதனுக்கும் உறக்கத்தின் அளவு மாறுபடும். தேவைப்படும் உறக்கத்தின் அளவு என்பது அவரவர் உடலின் தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும். உடல் மற்றும் மனதின் உழைப்பைப் பொறுத்து உறக்கம் குறைவாகவோ அதிகமாகவோ தேவைப்படும். ஆனால் குறைந்தபட்ச உறக்கத்தின் அளவு என்று இருக்குமே என்று கேட்டால், ஆம் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவாக 4 மணி நேரம் உறங்கினால் போதுமானது. அதுவும் கண்டிப்பாக இரவு நேர உறக்கமாக இருக்க வேண்டும்.

உறக்கம் தொடர்பான அச்சம் தேவையில்லை

என்னால் சரியாக உறங்க முடியவில்லை, எனக்கு உறக்கம் போதவில்லை, எனக்கு உறக்கம் குறைவாக இருக்கிறது, என்று எந்த அச்சமும் தேவையில்லை. உங்களுக்கு உறக்கம் குறைவாக இருந்தால், உங்கள் உடலுக்கு குறைவான உறக்கத்தின் அளவே போதுமானதாக உள்ளது என்று பொருளாகும்.

உதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்வோம். பல வருடங்களுக்கு முன்பு நான் அதிக நேரங்கள் உறங்குவேன். இரவில் 9 – 10 மணி நேரம் உறங்கி, பின்னர் பகலிலும் 2 – 3 மணி நேரம் உறங்குவேன். ஆனால் இப்போது இரவில் மட்டுமே, 5 – 6 மணி நேரங்கள் உறங்குகிறேன். எனக்கு என்ன நோய் கண்டுவிட்டதா?, இல்லை என் உடலும் மனமும் இப்பொழுது தான் ஆரோக்கியமான நிலையில் இருக்கின்றன. 5 மணி நேர உறக்கமே என் உடலுக்கும் மனதுக்கும் போதுமானதாக இருக்கிறது.

அதனால் உங்களுக்கு உறக்கம் குறைவாக இருக்கும் பட்சத்தில், பயம் வேண்டாம் உங்கள் உடலுக்கு உறக்கம் குறைவாகவே தேவைப்படுகிறது, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அறிக. ஆங்கில மருத்துவர்கள் கூறுவதை நம்பி பயப்பட வேண்டாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எவ்வளவு நேர உறக்கம் தேவை என்பதை உங்கள் உடல் நன்றாக அறியும். உங்கள் உடலைத் தவிரவும் உங்களை முழுமையாக அறிந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *