உடலில் ஏதாவது தொந்தரவுகள் தோன்றினால். அந்த தொந்தரவை மட்டுமே பார்த்து பயந்து கொண்டிருப்பார்கள் பலர். அந்த தொந்தரவு ஏன் உருவானது என்று சிந்திக்காமல், எப்படி சரி செய்வது என்பதில் மட்டுமே சிந்தனை இருக்கும். ஒரு நோய் உருவாக காரணமாக இருப்பனவற்றை சரி செய்யாமல் நோயை எவ்வாறு குணப்படுத்துவது?.

1. கண் நோய்கள், பார்வைக் கோளாறுகள், கண் கட்டிகளுக்கும், கண்கள் காரணம் இல்லை.

2. சலி, மூக்கடைப்பு, சைனஸ், இளைப்புக்கும் மூக்கு காரணம் இல்லை.

3. காது வலி, காது அடைப்பு, காதுகளில் அரிப்பு, கேட்கும் திறன் குறைவுக்கும் காது காரணம் இல்லை.

4. வாய், நாக்கு, உதடு புண்ணுக்கும், வாய் துர்நாற்றத்துக்கும், காரணம் வாயோ, நாக்கோ அல்ல.

5. தோல் நோய், புண், வெண் குஷ்டம், அலர்ஜி, அரிப்புகளுக்கு, முடி கொட்டுதல், மற்றும் பொடுகுக்கு காரணம் தோல் அல்ல.

தொந்தரவுகள் தோன்றும் இடத்தில் தான் உண்மையான நோய் இருக்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. இதனால் தான் என்ன வைத்தியம் செய்தாலும், இந்த நோய்கள் குணமாவதில்லை. இந்த நோய்களுக்கான உண்மைக் காரணத்தை அறிந்து மருத்துவம் செய்தால் தவிர, இவை தீராது. நோயின் மூலக் காரணங்கள் கூட அறியாதவர்கள், இவற்றை சரிசெய்ய நிச்சயமாக முடியாது.

நோய்கள் பலவாக இருந்தாலும், அவற்றை குணப்படுத்த, சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவைதான். தனித்திரு, விழித்திரு, பசித்திரு.

தனித்திரு – கவலை, துக்கம், கர்வம், பயம், எரிச்சல், போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல். நீங்கள் தனி உயிர் எந்த சூழ்நிலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை, என்பதை உணர்ந்து தனித்திருங்கள்.

விழித்திரு – உடலில் என்ன நடக்கிறது? ஏன், எதனால், நடக்கிறது என்று விழிப்பாக பாருங்கள், புரிந்துகொள்ளுங்கள்.

பசித்திரு – பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாக பசி உருவாகும் வரையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள். பசி அடங்கியவுடன்,  உடனே உண்பதை நிறுத்துங்கள்.

இவை மூன்றையும் பின்பற்றினால். உலகில் உள்ள அனைத்து நோய்களும் சுயமாக குணமாகும்.

 

Leave a Reply

Shopping Cart
There are no products in the cart!
0
X