உலக வாழ்க்கையின் சட்டங்கள். கர்மாவினால் உண்டாகும் துன்பங்களைத் தவிர்ப்பது மிகக் கடினம். அதைத் தவிர மற்ற அனைத்து வகையான துன்பங்களையும் சற்று கவனமாக இருந்தால் தவிர்க்க முடியும்.
நல்லவர்களுக்கு இந்தப் பூமியில் எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை தீயவர்களுக்கும் இருக்கிறது. எந்தத் தீயவரும் எந்த நல்லவருக்கும் கெடுதல்கள் செய்ய முடியும். அதனால் நீங்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட தீய மனிதர்களிடமிருந்து எந்த ஒரு தொந்தரவும் உருவாகாமல் இருப்பதற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இயற்கை காட்டும் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள், மனதில் தோன்றும் எண்ணங்களைத் தெளிவாகக் கவனித்துப் பின்பற்றி வாருங்கள். மாற்றவே முடியாதவற்றை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை நிம்மதியாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையும். வாழ்க வளத்துடன்.