உடலின் எதிர்ப்புச் சக்தி என்பது என்ன?
உடலின் எதிர்ப்புச் சக்தி என்பது உலகின் சீதோசன நிலை மாற்றங்களில் இருந்தும், வானிலை மற்றும் இயற்கை மாற்றங்களில் இருந்தும், நோய்களில் இருந்தும் உடலை பாதுகாக்க இயற்கை உடலுக்கு வழங்கிய ஆற்றலாகும். இந்த உலகில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் எதிர்ப்புச் சக்தி இருக்கும்.
மனிதர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் தொந்தரவுகளும் நோய்களும் அண்டாமல் பாதுகாப்பது அந்த எதிர்ப்புச் சக்தியின் வேலையாகும்.