உடல் உறுப்பு பாதிப்புகள் எதனால் உண்டாகின்றன? பயன்படுத்துவதால் உடல் உறுப்புகள் பழுதடைவதில்லை.
- சிந்திப்பதால் மூளை பழுதடைவதில்லை.
- பார்ப்பதால் கண்கள் பழுதடைவதில்லை.
- கேட்பதினால் செவிகள் பழுதடைவதில்லை.
- நுகர்வதால் மூக்கு பழுதடைவதில்லை.
- பேசுவதால் வாய் பழுதடைவதில்லை.
- பயன்படுத்துவதால் கரங்கள் பழுதடைவதில்லை.
- நடப்பதால் கால்கள் பழுதடைவதில்லை.
- இணை சேர்வதால் பிறப்புறுப்பு பழுதடைவதில்லை.
உடலின் எந்த உறுப்பும் அதனைப் பயன்படுத்துவதன் காரணமாக பழுதாவது இல்லை. தவறாகப் பயன்படுத்தும் போதும், தவறான நேரத்தில் பயன்படுத்தும் போதும் மட்டுமே உடல் உறுப்புகள் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளன.
ஒரு உறுப்பின் இயல்பான இயக்கத்தில் அதைப் பயன்படுத்தும் போது எந்த உறுப்பும் பாதிக்கப்படுவதில்லை, பழுதாவதும் இல்லை. உடலுக்கும் உடல் உறுப்புக்கும் தேவையான சத்துகளையும் ஓய்வையும் கொடுக்காமல் தொடர்ந்து பயன்படுத்துவதால் மட்டுமே ஒரு உறுப்பு பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.