திரிகால ஞானத்தை அடையும் வழிகள். திரிகால ஞானம் என்பது மனிதர்களுக்கு இயல்பிலேயே இருக்கக்கூடிய ஒரு ஆற்றல் தான் ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் இந்த ஆற்றலை பயன்படுத்தாமல் விட்டுவிட்டது.
திரிகால ஞானத்தை அடைவதற்கு மிக முக்கியமானது மனப் பக்குவம். முதலில் மனதை புரிந்துக்கொண்டு, மனதைக் கவனிக்க தொடங்க வேண்டும். அது எவ்வாறு இயங்குகிறது என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். மனதின் ஆசைகளையும் இச்சைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். தினமும் தியானம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் செய்து மனதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தொழுகை, உண்ணா நோன்பு, மௌனவிரதம், தெய்வ வெளிப்பாடு, குரு உபதேசங்கள், மந்திர உச்சாடனை, போன்றவையும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு செய்துவந்தால் மனம் மெல்ல நமக்குக் கட்டுப்பட்டு நடக்க தொடங்கும். மனம் தன் ஆசைகளுக்கு நம்மைப் பயன்படுத்தாமல், நம் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஊழியம் செய்யத் தொடங்கும். இந்த உலகில் எதுவுமே எளிதாக கிடைக்காது. கடுமையான உழைப்பும், முயற்சியும் இருந்தால் எதுவுமே இந்த உலகில் சாத்தியம்தான். விதியிலோ கர்மாவிலோ தடைகள் இருந்தால் திரிகால ஞானம் சித்தியாகாது.
Leave feedback about this