எதனால் சில தீய பழக்கங்களை மறக்க முடிவதில்லை? ஒரு தீய பழக்கத்தை பலமுறை செய்யும்போது அது உடலில் பதிவாகத் தொடங்குகிறது. அந்த அனுபவம் மனதிலும், உடலின் தசைகளிலும் அனுபவப் பதிவுகளாக பதிந்து விடுகின்றன.
உதாரணத்திற்கு தொடக்கத்தில் சைக்கிள் ஓட்ட தொடங்கும் போது தடுமாறி விழுந்து விடுகிறோம். அதுவே பலமுறை சைக்கிள் ஓட்டிய பிறகு அந்த அனுபவம் நமது மனதிலும் தசைகளிலும் பதிந்துவிடுகிறது. அதன் பிறகு தடுமாறாமல் ஒட்டுகிரோம்.
இதைப்போல் தான் மோட்டார் சைக்கிள், கார், போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களும். அவர்கள் தங்களின் சுய அறிவை பயன்படுத்தாமல் ஏற்கனவே ஒட்டிய அனுபவத்தைக் கொண்டு அவர்களின் உடல் சுயமாக ஓட்டுகிறது.
மனமும் உடலும் பழகிவிட்டதால் சில தீய பழக்கங்களை மறப்பதற்கும் விட்டு விடுவதற்கு கடினமாக இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை மீண்டும் மீண்டும் செய்து பழகும் போது தவறான தீய பழக்கங்கள் சுயமாக நம்மைவிட்டு நீங்கிவிடுகின்றன.
நல்ல விஷயங்களை பார்ப்பதற்கும், கேட்பதற்கும், சிந்திப்பதற்கும், செய்வதற்கும் உடலையும் மனதையும் பழகிவிட்டால் தீய விஷயங்கள் தானாக நம்மைவிட்டு விலகிவிடும்.
Leave feedback about this