தாம்பத்தியத்தில் திருப்தி அடைந்தீர்களா?

தாம்பத்தியத்தில் திருப்தி அடைந்தீர்களா? 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாமல் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிறது. தாம்பத்தியத்தில் திருப்தி அடைந்த மனிதர்கள் மட்டுமே வாழ்க்கையில் திருப்தி அடைவார்கள். தாம்பத்தியத்தில் முழுத் திருப்தி அடையாத மனிதனிடம் வேறு என்ன இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு வெறுமையை உணர்வான்.

தாம்பத்திய உறவில் பலர் திருப்தி அடையாததற்குக் காரணம். தாம்பத்திய உறவு என்பது வெறும் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் சார்ந்தது என்று நம்பிக் கொண்டிருப்பது தான்.

காமம் என்பது உடல் மட்டுமே சார்ந்த விசயம் அல்ல. காமம் உடல், மனம், புத்தி, சக்தி என நான்கு விசயங்கள் சம்பந்தப்பட்டவை. மனமும் புத்தியும் இணையாமல் உடலுறவு கொள்வதால் தான், இன்றைய கால கட்டத்தில் பல கணவன் மனைவிகள் உடலுறவில் திருப்தி இல்லாமல் வாழ்கிறார்கள். கணவனிடமோ மனைவியிடமோ உடலுறவில் திருப்தி அடையாதவர்கள், வேறு ஒரு ஜோடியைத் தேடிப் போகிறார்கள்.

உங்கள் ஜோடியின் மனதையும் உணர்வையும் தேவையையும் புரிந்து நடந்து கொள்ளுங்கள் தாம்பத்தியம் மகிழ்ச்சியாக இருக்கும்.

Leave feedback about this

  • Rating