சத்து மாத்திரைகள் பயனுள்ளவையா?

சத்து மாத்திரைகள் பயனுள்ளவையா? சத்து மாத்திரைகள் உடலுக்கு நன்மைகளைத் தருகின்றனவா? உடல் ஆரோக்கியத்திற்காக, பலத்திற்காக, அல்லது அழகுக்காக என்று சிலர் பல வகையான சத்து மாத்திரை, சத்துமாவு, விட்டமின், மினரல், போன்றவற்றை உட்கொள்கிறார்கள். இவை உடலுக்கு அவசியமானவையா? இவற்றினால் உண்மையிலேயே மனிதர்களுக்கு நன்மைகள் விளைகின்றனவா?

மழை பெய்யும் போது மிகுதியாக எவ்வளவு மழை பெய்தாலும், மழை நீருடன் ஆற்று நீர் வந்து சேர்ந்தாலும், கடல் அவற்றை ஏற்றுக் கொள்ளும். எவ்வளவு நீர் சேர்ந்தாலும் அவற்றைத் தாங்கிக் கொள்ளும், மேலும் அவற்றைச் சேர்த்து வைக்கும் தன்மையும் கடலுக்கு இருக்கிறது. ஆனால் அதே மழைநீர் ஒரு குட்டையில் பெய்தால், அந்த குட்டை நிரம்பியதும் மிகுதியாக உள்ள நீர் வழிந்து வெளியே ஓடிவிடும்.

அந்த குட்டையைப் போன்றதுதான் தான் நம் உடலும், உடலின் தேவைக்கு அதிகமாக நாம் உட்கொள்ளும் வைட்டமின், மினரல் போன்ற சத்துக்கள் அனைத்தும் சிறுநீர் அல்லது மலம் மூலமாக உடலைவிட்டு வெளியேறிவிடும். தினமும் சத்து மாத்திரைகளை உட்கொள்வது ஒரு பயனற்ற செயல் மட்டுமே.

உடல் தனக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும், நாம் உண்ணும் உணவிலிருந்து தானே உற்பத்தி செய்து கொள்ளும் ஆற்றலுடன் படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடலுக்கு சத்துக்கள் தேவைப்படும் என்பதற்காக மருந்து மாத்திரைகள், சத்துப் பொருட்கள், சத்துமாவுகள் போன்றவை உட்கொள்ளத் தேவையில்லை. இவற்றை உட்கொள்வது பண விரயம் மட்டுமின்றி இரசாயனம் மூலமாக தயாரிக்கப்படும் இவை உடலுக்குக் கெடுதல்களையும் நோய்களையும் உருவாக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு உணவுப் பொருள் பாக்கெட்டின் பின்புறமும், அந்த உணவுப் பொருள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது, அதில் என்னென்ன கலக்கப்படுகின்றன என்ற விவரங்கள் இருக்கும். நீங்கள் வாங்கும் எந்த சத்து மாத்திரையிலாவது, அந்த மாத்திரை எதிலிருந்து தயாரிக்க பட்டது? அதில் எவையெல்லாம் கலக்கப்படுகின்றன போன்ற விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளதா?

இனிமேல் மருந்து மாத்திரைகள், சத்து மாத்திரைகள் வாங்கும் போது அவற்றைப் பரிந்துரைக்கும் மருத்துவரிடமோ மருந்துக் கடையிலோ கேளுங்கள் இந்த மாத்திரைகள் எவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்பதை. சத்துக்களே இல்லாத, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மாத்திரைக்கு சத்து மாத்திரை என்று பெயர் அதை நாமும் வாங்கி உட்கொண்டு கொண்டிருக்கிறோம்.

ஒரு மனிதனுக்கு, கண், காது, மூக்கு, கை, கால், என உடல் உறுப்புகள் முழுமையாக இருக்கும்; அதைப்போல் இறந்து போன ஒரு சடலத்திலும், கண், காது, மூக்கு, கை, கால், என்று அனைத்தும் இருக்கும் அதற்காக சடலத்தை யாரும் மனிதன் என்று அழைப்பதில்லை. மற்றும் அந்த சடலம் மனிதனும் அல்ல.

அதைப் போன்றே சத்து மாத்திரைகளின் இரசாயனக் கட்டமைப்பும் உண்மையான சத்துக்களைப் போன்றே இருக்கலாம் ஆனால் அதில் உயிர் சக்தி (life force) இருக்காது. உயிர் சக்தி இல்லாத இந்த மாத்திரைகள் இறந்து போன சடலத்துக்குச் சமமானவையே. இரசாயன மாத்திரைகளை உட்கொள்ளும் மனிதர்களுக்கு நோய்களை உருவாக்குமே ஒழிய எந்த வகையான நன்மையையும் உருவாக்க வாய்ப்பில்லை.

சத்து மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அவற்றை முதலில் நிறுத்துங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் அவற்றைக் கொடுக்காதீர்கள். இயற்கையாக கிடைக்கக்கூடிய சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுங்கள்.

பழங்கள் காய்கறிகள் போன்ற உணவு வகைகளில் மட்டுமே உண்மையான, முழுமையான, உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகலும் கிடைக்கும். பழங்களை அதிகமாக உண்ணும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள். காய்கறிகளை அரை வேக்காட்டில் சமைத்துச் சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுங்கள். எந்த மருந்தும் மாத்திரையும் தேவையில்லை, இறுதி வரையில் ஆரோக்கியமாக வாழலாம்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field