சைவம் உட்கொள்பவர்களுக்கு சத்துக் குறைபாடுகள் ஏற்படுமா?

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு சத்துக் குறைபாடுகள் ஏற்படுமா?

மனிதர்களின் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் மட்டுமே முழுமையாக உள்ளன. அசைவம் உண்பவர்களுக்கு சில சத்து பற்றாக்குறைகள் ஏற்படலாம் ஆனால் சைவம் மட்டுமே உண்பவர்களுக்கு சத்து பற்றாக்குறைகள் நிச்சயமாக உண்டாகாது. உணவை பொறுமையாக மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு வேண்டுமானால் சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போகலாம். அதற்குக் காரணம் உண்ணும் முறையே அன்றி சைவ உணவு அல்ல.

சைவம் சாப்பிடுபவர்களுக்கு சத்து பற்றாக்குறை உண்டாகும் எனக் கூறி முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றை சாப்பிட பரிந்துரைப்பது அறியாமையே அன்றி வேறில்லை.

சத்துக்காக சாப்பிடச் சொல்லும் விலங்குகளான ஆடு, மாடு, கோழி போன்றவை சைவம் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். புல்லைச் சாப்பிட்டு அதை கொழுப்பாக ஓர் ஆட்டின் உடலினால் மாற்ற முடியும் என்றால் மனித உடலும் காய்கறி பழங்களை மட்டுமே கொண்டு தனக்குத் தேவையான அத்தனை சத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.