இரத்த அழுத்தம் உடலுக்கு நன்மையானது. நம் அன்புக்குரிய ஒருவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், இயல்பாக மெதுவாக நடந்து செல்வோமா? அல்லது வேகமாக ஓடிச்சென்று உதவுவோமா? இறக்கை இருந்தால் பறந்து கூட செல்வோம் அல்லவா? அதைத்தான் இருதயம் செய்கிறது. உடலில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அல்லது உறுப்புக்கு விரைவாக இரத்தத்தையும் சத்துகளையும் அனுப்புகிறது. போர்கால அவசர அடிப்படையில் இந்த செயல் நடைபெறுவதால் இரத்த அழுத்தம் உயர்கிறது.
இரத்த அழுத்தத்தை நோய் என்று நம்பி அதை தடுக்க, குறைக்க இரசாயனங்களை விழுங்குபவர்கள் நன்றாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மேலும் மோசமான நோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட உறுப்பு சரி செய்யப்படாமல் மேலும் பழுதடைகிறது. இந்த கேடு மற்ற ஆரோக்கியமான உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தத்தை தடுப்பது இருதயதில் பாதிப்பை உருவாக்கி விடக்கூடும் ஜாக்கிரதை.
பாதிக்கப்பட்ட உறுப்பு குணமானவுடன், அல்லது பாதிக்கப்பட்ட உறுப்பு சீர் செய்யப்பட்டவுடன், உடலின் நோய் குணமானவுடன், உடலில் குறைந்த சக்தி மீண்டவுடன், உயர் இரத்த அழுத்தம் தானாகக் குறைந்துவிடும். உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கிய உடலுக்கு அதை குறைக்கும் வழிமுறை தெரியாதா என்ன? நிச்சயமாக தெரியும். உடலுக்கு எல்லாம் தெரியும் அனைத்து தொந்தரவுகளும் கண்டிப்பாகக் குணமாகும்.