Holisticrays

ரெய்கியின் மூலமாக சிகிச்சை அளிக்க பின்பற்ற வேண்டிய முறைகள்:

1. ரெய்கி சிகிச்சையைப் பற்றி நோயாளிக்கு சிறிய விளக்கம் கொடுக்கவும்.

2. நோயாளியிடம் பேசி நோயின் மூலக் காரணத்தைக் கண்டறியவும்.

3. நோயாளியின் தொந்தரவுகள் பேய், பிசாசு, செய்வினை, மந்திரங்கள் போன்றவற்றால் உண்டாகியிருந்தால் level 1 தீட்சை பெற்றவர்கள் சிகிச்சை அளிக்கக் கூடாது.

4. நோயாளியைத் தொட வேண்டிய அவசியம் உண்டானால் முன் அனுமதிப் பெற்றுப் பின்னர் தொடவும்.

5. சிகிச்சையைத் தொடங்கும் முன் மனதாலே அவருக்கு பூரணமான ஆரோக்கியம் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவும்.

6. தொட்டோ, தொடாமலோ, முத்திரைகள் மூலமாகவோ அவருக்கு ரெய்கி ஆற்றலை அனுப்பவும்.

7. நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தவும்.

8. நோய்களை குணப்படுத்தும் உண்மையான மருத்துவர் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகளை (உணவை உட்கொள்ளும் முறைகள், தண்ணீர் அருந்தும் முறை, உடலுக்கு போதிய ஓய்வு, இரவு உறக்கம், மன அமைதி) ஆகியவற்றை பின்பற்ற அறிவுறுத்துங்கள்.

9. நோயாளியின் இரகசியங்களைப் பாதுகாத்திடுங்கள்.

10. சிகிச்சை அளிக்கும் முன்பாக இறைவன், இயற்கை மற்றும் ரெய்கியிடம் அனுமதியும், உதவியும் கோருங்கள்.

11. சிகிச்சைக்குப் பிறகும் இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும் நன்றி கூறுங்கள்.

Leave a Reply

Shopping Cart
There are no products in the cart!
0
X