ரெய்கி தீட்சை. ரெய்கி தீட்சையை பல வழிமுறைகளில் வழங்கலாம். ஒவ்வொரு குருவும் ஒரு தனிப்பட்ட வழிமுறையைப் பின்பற்றுவார். தீட்சை வழங்கும் குருவுக்கும் அதைப் பெற்றுக்கொள்ளும் மாணவருக்கும் ஏற்ப வழிமுறைகள் மாறுபடலாம். சிலர் எழுத்துக்கள் மூலமாகவும், சிலர் வார்த்தையாகவும், சிலர் ஓசையாகவும், சிலர் தொட்டும், சிலர் தொடாமலும், சிலர் வெறும் எண்ணங்களைக் கொண்டே தீட்சை வழங்குவார்கள்.
1. மனதாலே நினைத்து எண்ணங்களால் வழங்குவது.
2. மனதாலே நினைத்து பார்வையால் வழங்குவது.
3. மனதாலே நினைத்து வார்த்தையால் வழங்குவது.
4. மனதாலே நினைத்து ஒலியால் வழங்குவது.
5. மனதாலே நினைத்து வடிவத்தால் வழங்குவது.
6. மனதாலே நினைத்து தொட்டு வழங்குவது.
7. மனதாலே நினைத்து மந்திரங்கள் மூலம் வழங்குவது.
Leave feedback about this