மும்மூர்த்திகளின்
தொழிலையும்
பூமியில் தனி ஆளாய்
செய்கிறாள் பெண்
உலக வாழ்கையில்
மகிழ்ச்சியையும்
ஆனந்தத்தையும்
படைத்து
குடும்பத்தின்
அமைதியையும்
ஒற்றுமையையும்
காத்து
கட்டிய கணவனின்
கவலையையும்
துன்பத்தையும்
அழித்து
மும்மூர்த்திகளும்
தனித்தனியே
செய்யும் தொழிலை
பூமியில் தனி ஆளாய்
செய்கிறாள் பெண்
அதனால்தான்
தெய்வத்துக்கு
அலங்கரிக்கும்
மலர்களை
இந்த
தேவதைகளுக்கும்
சூட்டி அழகு
பார்க்கிறார்கள்
தமிழர்கள்
Leave feedback about this