பெண் பிள்ளைகளின் பருவ கால உடல் உபாதைகள். இன்றைய காலகட்டத்தில் பல பெண் பிள்ளைகள் வெகு விரைவாக, 12 வயதிலெல்லாம் பூபெய்து விடுகிறார்கள். சில பிள்ளைகள் 10 வயதிலும், இன்னும் சில பிள்ளைகள் 9 வயது, 8 வயதிலெல்லாம் பூபெய்து விடுகிறார்கள். இது இயற்கைக்கு மாறான தன்மையாகும்.
12 வயதில் பருவம் அடைவது ஆரோக்கியமானது அல்ல. ஒரு பெண் பிள்ளை பருவம் அடைவதாவது, ஒரு குழந்தையைச் சுமப்பதற்கு அவளின் கர்ப்பப்பை தயாராகி விட்டது என்பதைத் தானே அறிவிக்கிறது? 12 வயதில், 9 வயதில், 8 வயதில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையைச் சுமக்கத் தயாராக இருக்கிறது என்று உடல் அறிவித்தால், அந்த உடலில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
14 வயதுக்கு மேல் பருவம் அடைவது தான் ஆரோக்கியம்
14 – 15 வயதுதான் பெண் பிள்ளைகள் பருவம் அடைய ஏற்ற பருவமாகும். இது புரியாமல் 14 – 15 வயதில் பூப்பெய்தும் பிள்ளைகளை நோயாளி போலும் 12 வயதில் பூப்பெய்தும் பிள்ளைகளை ஆரோக்கியமானவள் போலும் சிலர் எண்ணுகிறார்கள்.
ஒரு பெண் பிள்ளை 14 வயதுக்கு முன்பாக பருவம் அடைந்து விட்டால், அவளின் கர்ப்பப்பை பலவீனமாக இருக்கிறது என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 14 வயதில் பருவம் அடைவதே ஆரோக்கியம்.
பெண் பிள்ளைகள் விரைவாக பூப்பெய்த காரணம்
பெண் பிள்ளைகள் விரைவாக பூப்பெய்வதற்கு காரணம் அவளின் கர்ப்பப்பையும் உடலும் பலவீனமாக இருப்பதுதான். தவறான உணவு முறையினாலும், தவறான வாழ்க்கை முறையினாலும் தான் இந்த தொந்தரவுகள் உருவாகின்றன.
குறிப்பாக பசியின்றி உண்பது, பசியின் அளவுக்கு அதிகமாக உண்பது, ஹார்மோன் ஊசி போடப்பட்ட கோழி இறைச்சியை அதிகமாக உண்பது, KFC, MarryBrown, Pizza, Burger, Fries, Chips போன்ற துரித உணவுகளை அதிகமாக உண்பது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், பிஸ்கட், நொறுக்குத் தீனிகள், மற்றும் குளிர்பானங்களை அதிகமாக உட்கொள்வது, மற்றும் மன அழுத்தமும், உடல் ஆரோக்கியம் சீர்கெட முக்கிய காரணமாக இருக்கின்றன.
பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, பெற்றோர்கள் இத்தகைய உணவு வகைகளை பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் தவிர்க்க வேண்டும். இல்லை என் பிள்ளைகள் பேச்சைக் கேட்பதில்லை, அடம் பிடிக்கிறார்கள் என்று நீங்கள் கூறினால். அவர்களுக்கு அந்த பழக்கத்தை உருவாகியதே நீங்கள்தான். சற்று கடுமையாக நடந்து கொள்ளுங்கள்.
பருவம் அடைந்த சிறுமிகளின் தொந்தரவுகள்
பருவம் அடைந்த பெண் பிள்ளைகள், பருவம் அடைந்த ஆரம்பக்கால கட்டத்தில் சில தொந்தரவுகளை உணரலாம். குறிப்பாக மாதம் தவறி வருதல், அதிகமாக அல்லது குறைவான மாத போக்கு, மாத போக்கு சில நாட்கள் நீடித்தல், அல்லது ஓரிரு நாட்களில் நின்று விடுதல், பருவம் அடைந்து சில மாதங்கள் வராமல் இருத்தல்; கால், தொடை, இடுப்பு பகுதிகளில் வலி போன்றவை.
பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் இவற்றைத் தெரிந்து, புரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் பெண் பிள்ளைகளுக்கும் கற்றுத் தர வேண்டும்.
1. 16 வயது வரையில் பெண் பிள்ளை பருவம் அடைய வில்லை என்றாலும் பரவாயில்லை, பொறுமையாக இருங்கள், உடல் தன்னை தானே சீர்செய்து கொண்டு, பருவம் அடைவாள்.
2. பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு, சில மாதங்கள் மாத சுழற்சி நடக்கவில்லை என்றாலும் தவறில்லை.
3. பருவம் அடைந்த பெண் பிள்ளைகளின் மாத சுழற்சி முறையாக நடைபெற சில காலம் ஆகலாம், சிலருக்கு சில வருடங்கள் கூட ஆகலாம், அதனால் பயம் தேவை இல்லை.
பெண் பிள்ளைகளின் தொந்தரவுகளுக்கு தீர்வு
பெண் பிள்ளைகள் பருவம் அடைந்த தொடக்கத்தில் தோன்றும் எந்த தொந்தரவுக்கும் மருத்துவம் செய்யக் கூடாது. மீறி மருத்துவம் செய்தால் அது அவளின் கர்ப்பப்பையைப் பாதித்து நோய்களையும், உடல் உபாதைகளையும் உருவாக்கும்.
உணவு முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் சரி செய்தாலே போதும், எல்லா தொந்தரவும் குணமாகும். பசி உருவானப் பின் சாப்பிடச் சொல்லுங்கள். பழங்கள், மற்றும் காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடக் கொடுங்கள். இரவில் விரைவாக படுக்கைக்குச் செல்லச் சொல்லுங்கள். இது போதும், எந்த மருத்துவமும் தேவையில்லை.
தற்போது ஏதாவது மருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்தால், உடனே நிறுத்துங்கள். எல்லாத் தொந்தரவும் குணமாகும்.
Leave feedback about this