ஓய்வு என்பது என்ன?
ஓய்வு என்பது உடல் செலவழித்துவிட்ட சக்தியை மீண்டும் உற்பத்தி செய்து கொள்வதற்கு கொடுக்கப்படும் அவகாசம் ஆகும். உடல் உழைப்பு செய்யும் போது சோர்வோ, அசதியோ, வலியோ, உண்டானால் உடலின் ஆற்றல் குறைந்து விட்டது உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்பது பொருளாகும். மூளையைப் பயன்படுத்தும் போதும் சோர்வு உண்டானால் மூளை கலைத்து விட்டது என்று பொருளாகும்.
இவை போன்ற சூழ்நிலைகளில் ஓய்வெடுத்து அல்லது சற்று நேரம் உறங்கி உடல் மீண்டும் தனது ஆற்றலை உற்பத்தி செய்துகொள்ள அவகாசம் கொடுக்க வேண்டும்.