முஸ்லிம்கள் கட்டாயம் மாட்டிறைச்சி உட்கொள்ள வேண்டுமா?
இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மாட்டு இறைச்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உட்கொள்ள வேண்டும் என்றோ மாமிசம் உண்ண வேண்டும் என்றோ இஸ்லாத்தில் எந்த சட்டமும் கிடையாது. சுத்த சைவமான உணவை உட்கொள்ளும் ஒருவர் கூட ஒரு நல்ல முஸ்லிமாக இருக்க முடியும்.