ஒரு மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? உயிர் பிரியும் வேளையில் மனதில் அமைதியும், நிம்மதியும், இறைச் சிந்தனையும், மட்டுமே இருக்க வேண்டும். பயம் பதற்றம் எதுவுமே இல்லாமல் அமைதியாக உடலைத் துறக்க வேண்டும்.
யாருடைய மரணமும், சாலைகளிலோ, மரணப் படுக்கையிலோ, மருத்துவமனையிலோ ஏற்படக்கூடாது. அவன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்குச் செல்கிறேன், சென்று வருகிறேன்; மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று; அவன் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியாக தன் உடலைத் துறக்க வேண்டும்.
தவறான வளர்ப்பினாலும், உணவு முறையினாலும், வாழ்க்கை முறையினாலும், மட்டுமே இயற்கைக்கு மீறிய மரணங்கள் மனிதர்களுக்கு உண்டாகின்றன. வாழ்க்கையில் செய்யும் தவறுகளினால் விதி முடிவதற்கு முன்பாகவே நோயிலும், விபத்திலும், சிகிச்சையிலும், மருத்துவமனையிலும், சிலர் உயிர் பிரிகிறது.
உடல் சொல்வதையும் இயற்கை பேசுவதையும் கேட்டு சரியான உணவு முறையும், வாழ்க்கை முறையும், அமைத்துக் கொள்ளுங்கள்; ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழுங்கள்.
நான் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வேன், வாழ்கிறேன் என்று நம்புங்கள். வாழும்போது ஆரோக்கியமாக வாழுங்கள் மரணம் வந்தால் மகிழ்ச்சியாக விடை பெற்றுச் செல்லுங்கள். நல்லதே நடக்கும், சந்தோசம்.