Woman in Gray Shirt Sitting Beside Man
ஆண்கள்

மனச் சமமின்மையால் உண்டாகும் ஆண்மைக் கோளாறு

மனச் சமமின்மையால் உண்டாகும் ஆண்மைக் கோளாறு. மனச் சமமின்மையே பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மை வீரியக் குறைபாடுகளை உண்டாக்குகிறது. குடும்பத்திலும், வேலையிடங்களிலும், சமுதாயத்திலும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மனதில் பதிவாகி, ஆண்மையின் வீரியத்தைக் குறைக்கின்றன.

மனதின் பதிவுகளில் இருக்கும் கவலை, பயம், எரிச்சல் போன்ற தீய எண்ணங்கள் மிக கேடான ஆண்மை கோளாறுகளை உண்டாக்குகின்றன. ஒருவரின் மனதினுள் பதிவான பயம் கவலை போன்ற எண்ணங்கள் சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் அந்தப் பதிவுகள் மனதின் உள்ளேயே இருந்துக் கொண்டு சம்பந்தப்பட்டவரின் உடலின் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், கெடுத்துக் கொண்டிருக்கும்.

மனதில் கவலையோ பயமோ இருக்கும் போது மனைவியுடன் கூட வேண்டும் என்ற இச்சை உருவானாலும், மனமும் உடலும் அதற்கு ஒத்துழைக்காது. அதையும் மீறி முயன்றாலும் முழுமையாக ஈடுபடவும் முடியாது. விந்து முந்துதல், பாதியில் சுருங்குதல், மனதில் மற்ற எண்ணங்கள் உருவாக்குதல், பயம், கவலைகள் தோன்றுதல், உடல் வலிகள், சோர்வு போன்றவை ஏற்படலாம்.

எந்தக் கவலையும், பயமும் இல்லாமல், மனதை அமைதியாக வைத்திருப்பதே இதற்கு ஒரே தீர்வு. மனதைப் பற்றிய ஒரு இரகசியம் சொல்கிறேன். இந்த உலகத்திலும் உங்கள் வாழ்க்கையிலும் எல்லாவற்றையும், உங்களால் மாற்றிவிட முடியாது என்ற தெளிவும். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித் தனியான மனமும் குணமும் இருப்பதனால் அவர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட குணாதிசயங்களுடன் தான் இருப்பார்கள் என்ற தெளிவும் இருந்தால்; உங்களுக்கு எந்தக் கவலையும் பயமும் உண்டாக வாய்ப்பு இல்லை. அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும்.

நகைச்சுவை திரைப்படம், நகைச்சுவை காட்சிகள், பாடல்கள், மென்மையான இசை, நல்ல புத்தகங்கள், வணக்க வழிபாடுகள், தியானம் போன்றவற்றை மனதை மாற்ற உதவும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்த பந்தங்களுடன் நேரம் செலவழிப்பது மன நிம்மதியையும் தைரியத்தையும் ஒடுக்கும்.