மன அழுத்தங்களுக்குத் தீர்வுகள். மனிதர்களின் மனங்களில் உருவாகும் அழுத்தம், சோர்வு, கவலை, வேதனை, அனைத்துமே வெளியில் இருந்து தூண்டப்படுபவைதான். பிற மனிதர்கள் செய்த தவறுகளையும், பேசிய வார்த்தைகளையும் எண்ணி; அல்லது, பிற மனிதர்களின் கருத்துக்களையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து இவர்கள் வேதனையை அனுபவம் செய்கிறார்.
யாரோ செய்த தவறுக்கு நான் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்? நான் எதற்காக மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்று சிந்திக்காமல். தன்னை வருத்திக் கொண்டு, மனதைச் சீர்கெடுத்து, உடலின் ஆரோக்கியத்தையும் சீர்கெடுத்துக் கொள்கிறார்கள்.
பிறரின் கருத்துகளுக்கும், அங்கீகாரத்துக்கும், அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். நடந்து முடிந்த கசப்பான விசயங்களை மறந்துவிட்டு நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
Leave feedback about this