மலேசியாவில் கிரிப்டோ நாணயங்களை வாங்குவதற்கு இணையத்தில் பல நூறு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் இருந்தாலும் அவற்றுக்கு மலேசியா அரசாங்கத்தின் அனுமதி கிடையாது. மலேசிய நாணயத்தின் மதிப்பிலோ, மலேசியா வங்கிக் கணக்கைக் கொண்டோ, மலேசிய வங்கிகள் வெளியிடும் வங்கி அட்டைகளைக் கொண்டோ, பெரும்பாலான கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் கிரிப்டோ நாணயங்களை வாங்கவும் விற்கவும் முடியாது.
மலேசிய அரசாங்கம் மூன்று நிறுவனங்களுக்கு மட்டும் கிரிப்டோ நாணயங்களை விற்பனை செய்யவும், வாங்கவும், பரிமாற்றம் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் முதன்மையான நிறுவனம் லூனோ (Luno).
லூனோ நிறுவனத்தின் மூலமாக மிகக் குறைவான மதிப்பில் அதாவது மலேசிய ரிங்கிட் 10 முதலாக கிரிப்டோ நாணயங்களை வாங்கலாம். கிரிப்டோ வாங்க குறைந்த பட்சம் 10 வெள்ளியும் அதிகபட்சம் ஒரு முறை முதலீடாக 29,999 வெள்ளியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த லூனோ நிறுவனத்தின் சிறப்பு என்னவென்றால், அத்தனை கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களிலும் அமெரிக்க டாலர் அல்லது யூரோ அடிப்படை நாணயமாக பயன்படுத்தப்படும் போது, மலேசியாவிலிருந்து கிரிப்டோ நாணயங்களை வாங்குவோரின் லூனோவில் மலேசிய ரிங்கிட் அடிப்படை நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மலேசியர்கள் நேரடியாக தங்களின் மலேசிய வங்கிக் கணக்கிலிருந்து லூனோவில் கிரிப்டோ நாணயங்களை வாங்கலாம் விற்பனை செய்யலாம். Binance, Coinbase போன்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் கிரிப்டோ நாணயங்களை வைத்திருப்போர் அவற்றை லூனோ எக்ஸ்சேஞ்சுக்கு மாற்றி, அவற்றை மலேசியா வெள்ளிக்கு விற்பனை செய்யலாம். விற்பனைக்கான பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
புதிதாக கிரிப்டோ நாணய சந்தையில் நுழைபவர்களுக்கும் சேமிப்புக்காக அல்லது முதலீடாக கிரிப்டோ நாணயம் வாங்குபவர்களுக்கும் லூனோ ஒரு சிறந்த தலமாக இருக்கும். லூனோவில் பணம் மாற்றுக் கட்டணமில்லாமல் விரும்பப்படும் நாணயங்களை வாங்கலாம், அதாவது மற்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் கிரிப்டோ நாணயங்கள் வாங்கும் போது அமெரிக்கா நாணயமாக செலுத்த வேண்டும். மலேசிய வெள்ளியை அமெரிக்கா நாணயமாக மாற்றும் போது நூறு டாலருக்கு இரண்டு டாலர் முதல் பத்து டாலர் வரையில் நஷ்டமாகும், லூனோவில் இதை தவிர்க்கலாம்.
தற்போது மலேசியாவில் உள்ளவர்கள் Bitcoin, Ethereum, Litecoin, XRP, Solana, ADA, Link, UNI மற்றும் BCH நாணயங்களை மட்டுமே லூனோ எக்ஸ்சேஞ்ச் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியும். இதை ஒரு பாதுகாப்பு அம்சமாக மட்டுமே நான் பார்க்கிறேன். அதாவது நிலையான சந்தை மதிப்புடைய பாதுகாப்பான நாணயங்களை மட்டுமே மலேசியர்கள் லூனோ மூலமாக வாங்க முடியும். இந்த நடைமுறை மலேசியர்களின் பணத்தைப் பாதுகாக்க மற்றும் நஷ்டத்தைக் குறைக்க, ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடாக இருக்கலாம்.
Leave feedback about this