மலர் மருத்துவத்தை பயன்படுத்தும் முறை

person holding bottle

மலர் மருத்துவத்தை பயன்படுத்தும் முறை. மனிதர்களின் பெரும்பாலான நோய்கள் மனதில் இருந்துதான் தொடங்குகின்றன என்பதை டாக்டர் எட்வர்ட் பாட்ச் கண்டறிந்தார். மனதை சரி செய்தால் பெரும்பாலான நோய்களை குணப்படுத்திவிட முடியும் என்பதை உணர்ந்த அவர், மனதை சரிசெய்யக்கூடிய 38 வகையான மலர் மருந்துகளை உருவாக்கினார். 39-வது மருந்து வகையாக ரெஸ்க்யூ ரெமெடி (Rescue Remedy) எனும் அவசர காலங்களில் உதவக்கூடிய மலர் மருந்து கலவையையும் உருவாக்கினார்.

மலர் மருந்துகள், மனதின் குறைகளை நீக்குவதன் மூலமாகவும், மனதை சீர்செய்வதன் மூலமாகவும், உடலின் தொந்தரவுகளை நீக்க உதவுகின்றன.

பாட்ச் மலர் மருந்துகளை நீரில் கலந்தோ, சர்க்கரை உருண்டைகளில் கலந்தோ, அல்லது நேரடியாக நாக்கின் கீழ் வைத்தோ பயன்படுத்தலாம். மருந்துகளுக்கு பக்க விளைவுகள் கிடையாது என்பதால், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் கூட தைரியமாக எடுத்துக்கொள்ளலாம். இதை நவீன மனநல மருந்துகளுடன் இணைத்தும் பயன்படுத்தக்கூடிய மருந்தாகும்.

ஒவ்வொரு நபருக்கும், அவரின் பாதிப்புக்கு ஏற்ப, அவர் எடுத்துக் கொள்ள வேண்டிய மலர் மருந்து, மருந்தின் அளவு, எடுத்துக் கொள்ள வேண்டிய வேலைகள், எடுத்துக்கொள்ள வேண்டிய கால அவகாசம், போன்றவற்றை ஒரு நல்ல மலர் மருத்துவம் அறிந்தவரிடம் ஆலோசனை செய்து, பின்னர் மலர் மருந்துகளை பயன்படுத்துவது நல்லது.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field