ஆன்மீகம்

சில மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எதனால்?

வாசகரின் கேள்வி:

முற்காலத்தில் சில மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எதனால்?

பதில்:

உண்மையைச் சொல்வதானால் தமிழிலோ, தமிழினத்திலோ சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததில்லை. செய்யும் தொழிலைக் கொண்டும், வாழும் நகரத்தைக் கொண்டும் மனிதர்கள் இனம் காணப்பட்டார்கள். அதுவும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத அடையாளப் பிரிவுகள் மட்டுமே. அவர் மதுரைக்காரர், திருச்சிக்காரர், சென்னைக்காரர், இவர் மெக்கானிக், மருத்துவர், வியாபாரி, தொழிலாளி, என்பதைப் போல இப்போதும் சில வேளைகளில் நாம் பயன்படுத்துகிறோம். ஏற்றத் தாழ்வுகளுக்கு இடமில்லாமல் ஊரையும் தொழிலையும் கொண்டு இனம் பிரிக்கிறோம்.

தொடக்கக் காலத்தில் அனைவரும் கோயில்களுக்குச் சென்று, சுயமாக தன் மனதுக்கு ஏற்ப தெய்வங்களை வழிபடும் முறைதான் இருந்து வந்தது. நாயன்மார்கள் கதைகளைப் படித்தால் புரியும்.

நமது சமுதாய அமைப்பில், சமூக வாழ்வும், ஒற்றுமையும், அன்பும், பேணிக் காக்க பட்டன. அவற்றைக் கட்டிக்காக்க தனி மனித ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. அதனால் சுய ஒழுக்கம் இல்லாத மனிதர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். சமுதாய கட்டுப்பாட்டை மீறிய மற்றும் தீய குணங்களைக் கொண்ட மனிதர்களுக்கு கோயிலுக்குள் நுழைய முன்காலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

கால ஓட்டத்தில் கோயிலுடன் தொடர்புடைய ஒரு சிலரின், பண ஆசை, பதவி ஆசை, தலைமைத்துவ ஆசை, ஜாதி மேலாண்மை, என பல காரணங்களால் தனிமனித ஒழுக்கத்தினால் என்ற கட்டுப்பாடு, இனம், ஜாதி, குலம் பார்த்து வழிபாட்டுத் தளங்களில் அனுமதிப்பது என்று மாறிப் போனது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *