காய்ச்சலின் நோக்கம் என்ன?
காய்ச்சல் உண்டாவதன் நோக்கம், காய்ச்சல் உண்டானவரை அமைதியாகப் படுத்து ஓய்வெடுக்க வைப்பது.
தலைவலியின் நோக்கம் என்ன?
தலைவலி உருவாவதன் நோக்கம், தலைவலி உண்டானவரை ஒரு இடத்தில் அமைதியாக ஓய்வெடுக்க வைப்பது.
உடலில் சோர்வு உருவாவது ஏன்?
உடலில் சோர்வு உண்டானால் மனம் சோர்ந்துவிட்டது அல்லது உடலின் ஆற்றல் குறைந்துவிட்டது என்று அர்த்தம்.
உடலில் அசதி உருவாவது ஏன்?
உடலில் அசதி உருவானால் உடலின் சக்திகள் தீர்ந்துவிட்டன என்று அர்த்தம். புதிய சக்திகளை உற்பத்தி செய்வதற்கு உடலுக்கு ஓய்வு தேவை என்று அர்த்தம்.