
1. மூலாதாரம் – Mooladhara – Root/ Base Chakra
அமைவிடம்: முதுகெலும்பின் ஆக கடைசி பகுதியில், வால் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.
வர்ணம்: சிகப்பு
பஞ்சபூதம்: நிலம்
திறன்: மனிதர்களின் அடிப்படைத் தேவைகளையும், உணர்வுகளையும் உருவாக்கும், கொடுக்கும், கட்டுப்படுத்தும்.
2. சுவாதிஸ்தானம்: Svadhisthana – Sacral Chakra
அமைவிடம்: தொப்புளில் இருந்து இரண்டு அங்குலம் கீழே அமைந்துள்ளது.
வர்ணம்: ஆரஞ்சு
பஞ்சபூதம்: நீர்
திறன்: மனிதர்களின் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் உருவாக்குகிறது, கட்டுப்படுத்துகிறது.
3. மணிபூரகம் Manipura – Solar Plexus Chakra
அமைவிடம்: தொப்புளுக்கும், நெஞ்சுக்கும் நடுவில் அமைந்துள்ளது.
வர்ணம்: மஞ்சள்
பஞ்சபூதம்: நெருப்பு
திறன்: தன்மானம், தன்னம்பிக்கை மற்றும் தன்மதிப்பை பாதுகாக்கிறது.
4. அனாகதம் Anahata – Heart Chakra
அமைவிடம்: நெஞ்சுப் பகுதியில் இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
வர்ணம்: பச்சை
பஞ்சபூதம்: காற்று
திறன்: அன்பு, பாசம், கருணை, அமைதி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை உருவாக்கவும் பாதுகாக்கவும் செய்கிறது.
5. விசுத்தி Vishudha –Throat Chakra
அமைவிடம்: கழுத்தில் தொண்டைக் குழியின் பின் அமைந்துள்ளது.
வர்ணம்: நீலம்
பஞ்சபூதம்: மரம்
திறன்: பேச்சுத் திறன், நேர்மை, ஒழுக்கம் போன்றவற்றை உருவாக்குகிறது, பாதுகாக்கிறது.
6. ஆக்கினை Ajna – Brow / Third Eye Chakra
அமைவிடம்: இரு கண்களின் புருவ மத்தியில் அமைந்துள்ளது.
வர்ணம்: கறுநீலம்
பஞ்சபூதம்: புத்தி
திறன்: புத்தி கூர்மையையும், பகுத்தறிவையும், சிந்தனை ஆற்றலையும் பாதுகாக்கிறது.
7. சஹஸ்ராரம் Sahasrara – Crown Chakra
அமைவிடம்: தலைக்கு ஒரு அங்குலம் மேலே
வர்ணம்: கத்தரிப்பு
பஞ்சபூதம்: பிரபஞ்சம்
திறன்: இந்தப்பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிவிப்பது. ஞானத்தை அடைவது.