ஹனிசக்கிள் மலர் மருந்து

ஹனிசக்கிள் மலர் மருந்து (Honeysuckle), கடந்த கால நினைவுகளில் மூழ்கி நிகழ்காலத்தை புறக்கணிக்கும் நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கியப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஹனிசக்கிள் மலர் மருந்தின் குணாதிசயங்கள்

ஹனிசக்கிள் குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள், கடந்த கால நினைவுகளில் மூழ்கி, நிகழ்காலத்தை புறக்கணிக்கும் நபர்களாக இருப்பார்கள். கடந்த காலத்தில் நடந்த விசயங்களுக்காக அடிக்கடி ஏக்கம் மற்றும் வருத்தம் கொள்வார்கள். பழைய நினைவுகளை மறக்க முடியாமல், அவற்றை நினைத்து அடிக்கடி வருந்துவார்கள்.

குடும்பத்தை பிரிந்து இருக்கும் போது அவர்களை நினைத்து அதிகம் வருத்தம் கொள்வார்கள். கடந்த கால நிகழ்வுகளை நினைத்து வாழ்க்கையில் புதிய விசயங்களை தொடங்க அஞ்சுவார்கள்

ஹனிசக்கிள் மலர் மருந்தின் பயன்கள்

ஹனிசக்கிள் மலர் மருந்து கடந்த காலத்தில் இருந்து வெளிவந்து, நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுகிறது. மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை குறைத்து, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கிறது. கடந்த காலத்தை மறந்து, நிகழ்காலத்தில் வாழ உதவுகிறது.

புதிய சூழலில் வாழவும், மன அமைதியுடன் இருக்கவும் உதவுகிறது.மனதில் தெளிவை ஏற்படுத்தி, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

இந்த மலர் மருந்து, கடந்த கால நினைவுகளில் இருந்து வெளியே வந்து, நிகழ்காலத்தில் கவனம் செலுத்தவும், வாழ்க்கையில் முன்னேறவும் உதவுகிறது.

Leave feedback about this

  • Rating