கர்வம் ஆணவம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

கர்வம் ஆணவம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? கர்வம் என்பது தன்னிடம் இருக்கும் ஒரு மேன்மையான விஷயத்தையோ, உயர்வான கல்வியையோ, திறமையையோ, விலைமதிப்புடைய பொருளையோ, எண்ணி பெருமைக் கொள்வது.

ஆணவம் என்பது தன்னையும் தன்னிடம் உள்ளதையும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைக் கொள்வது.

கர்வம் கொள்வதற்கு ஏதாவது ஒரு உயர்வான திறமை, கல்வி, பொருள், பெருமை போன்றவை இருக்க வேண்டும். ஆனால் ஆணவம் கொள்வதற்கு எந்த உயர்வான விஷயம் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை.

வெறும் கற்பனையும் நம்பிக்கையும் மட்டுமே ஆணவத்தை உருவாக்கிவிடும்.

Leave feedback about this

  • Rating