Holisticrays

வெளி நாடுகளில் வாழ்பவர்களுக்கு எதனால் கட்டணம் சற்று அதிகமாக விதிக்கப்படுகிறது?

இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் மாணவர்களைவிடவும் மலேசியா, சிங்கப்பூர், துபாய், சவுதி அரேபியா, அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு கட்டணம் சற்று அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இலங்கை போன்ற ஏழை நாடுகளுக்கு கட்டணத்தில் மாற்றமில்லை.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு, இந்திய மாணவர்களை விடவும் கட்டணம் அதிகம் என்றாலும் கூட, அவர்கள் நாட்டில் அது மிகவும் மலிவான கட்டணமே. உதாரணமாக மலேசியாவில் லெவல் 4 & 5 க்கு பயிற்சிக்கு 2,500 முதல் 10,000 வெள்ளி வரையில் வசூலிக்கிறார்கள், நாம் 500 வெள்ளி வரையில் தான் வசூலிக்கிறோம்.

சிங்கப்பூரில் லெவல் 4 & 5 க்கு 3,000 முதல் 10,000 டாலர்கள் வரையில் வசூலிக்கிறார்கள், நாம் 500 டாலர் வரையில் மட்டுமே வசூலிக்கிறோம். இப்படி வளர்ந்த நாடுகளில் வசூலிக்கப்படும் பயிற்சி கட்டணங்களுடன் ஒப்பிட்டால் நாம் அவர்களிடம் 10% கட்டணத்தைக் கூட வசூலிப்பதில்லை. காரணம் அவர்களும் நம் இன மக்களே.

நாம் ஒவ்வொரு வாரமும் பல இலவச சந்திப்பு கூட்டங்களும், இலவச பயிற்சிகளும் நடத்துகிறோம். மூன்று இணைய தளங்கள் நம்மிட உள்ளன. அவற்றில் அனைவருக்கும் உதவக்கூடிய பல விவரங்களை பகிர்ந்துகொள்கிறோம். நமது அமைப்பையும் கூட்டத்தையும் பராமரிப்பதற்கு பல வேறு வகையான செலவுகள் உள்ளன.

இந்த செலவுகளை எல்லாம் சரிக்கட்டவும், இலவச வகுப்புகள் நடத்தவும் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களிடம் சற்று அதிகமாக கட்டணம் வசூலிக்கிறோம். அதுவும் மிகச் சிறிய வித்தியாசத்தில் மட்டுமே. அவை பல பயனாக காரியங்களுக்கும், பராமரிப்பு செலவுகளுக்கும் பயன்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Shopping Cart
There are no products in the cart!
0
X