எதிர்மறை வார்த்தைகள் என்பவை என்ன?
எதிர்மறை வார்த்தைகள் என்பவை ஒரு மனிதனின் தன்னம்பிக்கையைத் தகர்க்கக்கூடிய வார்த்தைகள். நடக்காது, முடியாது, கிடைக்காது என்பதைப் போன்ற தடங்களான வார்த்தைகள் தான் எதிர்மறை வார்த்தைகள்.
அடிக்கடி இவ்வாறான வார்த்தைகளைச் செவிமடுக்கும் போது, மனிதனின் மனம் அதனை நம்பத் தொடங்குகிறது. அந்த நம்பிக்கையினால் மனம் தனது எல்லையையும் ஆற்றலையும் சுருக்கிக் கொள்கிறது.