Scenic View Of Night Sky
ஈர்ப்பு விதி

ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது?

ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது என்று கேட்டால், இயற்கையின் அமைப்பில் மனிதர்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது இயற்கையின் சட்டம்.

மனிதர்களுக்குத் தேவைகள் அல்லது ஆசைகள் உருவாகும் போது, அவற்றை அடைவதற்குரிய வழிகாட்டுதல்களும், பாதைகளும், அறிவும் அவர்களுக்கு வழங்கப்படும். அவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், அவர்கள் ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறும்.

ஈர்ப்பு விதி (Law of attraction) என்பது மனிதன் ஆசைப்படுவதையோ, அவன் விரும்புவதையோ, அவன் கனவு காண்பதையோ, அவன் நம்புவதையோ கொடுப்பது அல்ல. ஒரு மனிதனுக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதைக் கொடுப்பதுதான் ஈர்ப்பு விதி. ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்றால், முதலில் அதை அடையத் தேவையான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக அதற்குரிய உழைப்பைப் போட வேண்டும். இவற்றைச் செய்தால்தான் இயற்கை வழிகாட்டும், உதவியும் செய்யும்.

இயற்கை பேசுவதையும், இயற்கை காட்டும் அறிகுறிகளையும் சிறிது உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நம் வாழ்க்கையில், நம்மை சுற்றி நடப்பதை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினால், நமக்குத் தேவையான அனைத்தையும் நிச்சயமாக அடையமுடியும்.