டாக்டர் பாட்ச் மலர் மருந்துகள். இயற்கையில் பலவகையான குணப்படுத்தும் ஆற்றல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, இயற்கையில் மலரும் பூக்களில் உள்ள அதி நுட்பமான அலைவரிசைகள் (vibrations). இந்த அலைகள், மனிதர்களின் மனதை அமைதிப்படுத்தி, உடல் மற்றும் உணர்வுகளின் சமநிலையை சீர்செய்ய உதவுகின்றன.
டாக்டர் பாட்ச் மருத்துவ முறையில் 38 தனித்துவமான மலர் மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றில் ஒவ்வொரு மலர் மருந்தும் ஒரு சில உணர்வு நிலையை சீர்செய்வதற்கு உதவுகின்றன. உதாரணதிற்கு:
Mimulus – பயத்தைக் குறைக்க உதவும்.
Rock Rose – கடுமையான பதற்றத்தைச் சமாளிக்க உதவும்.
Walnut – வாழ்க்கை மாற்றங்களை ஏற்றுக்கொள்ள உதவும்.
Rescue Remedy – அவசர நிலை உணர்வுகளை சமாளிக்கப் பயன்படும்.
Larch – தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
White Chestnut – அதிகபடியான எண்ணங்களின் பெருக்கத்தைக் குறைக்க உதவும்.
Olive – உடல் மற்றும் மனச்சோர்வை நீக்க உதவும்.
இவ்வாறு, மனிதர்களின் பலதரப்பட்ட மனநிலைகளையும், மனதின் பாதிப்புகளையும், சரி செய்யக்கூடிய 38 வகையான மலர்களையும் இயற்கையான விஷயங்களையும் தேர்ந்தெடுத்து, கலந்து, பதப்படுத்தி, டாக்டர் பாட்ச் அவர்கள் மலர் மருந்துகளை உருவாக்கினார்கள்.
Leave feedback about this