மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் அமைந்துள்ளன. அவற்றை சக்ரா என்று அழைப்பார்கள். சக்ரா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சக்கரம் அல்லது சுழல்வது என்று பொருளாகும். மனித உடலில் அமைந்திருக்கும் இந்த சக்தி மையங்கள் எப்போதும் சுழன்றுக் கொண்டே இருக்கும் தன்மையுடையவை. ஆற்றல்களை உருவாக்குவதும் அதன் தொடர்புடைய பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பதும் இவற்றின் வேலையாகும்.

இந்த சக்கரங்களில் ஏற்படும் குறைபாடுகளும், சத்தி தட்டுப்பாடுகளும் அதன் தொடர்புடைய உறுப்புகளில் நோய்களையும், அதன் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் மனித வாழ்க்கையில் சில சிக்கல்களையும் உருவாக்குகின்றன.

சக்ராக்கள் உடலளவில் மட்டுமின்றி சக்தி நிலையிலும் மனிதர்களுக்கு பலவகையில் உதவியாக இருக்கின்றன. உடலின் சக்ராக்களை சரி செய்வதம் மூலமாக மனிதர்களின் அனைத்து வகையான நோய்களையும். வாழ்க்கையின் அனைத்து வகையான துன்ப துயரங்களையும் களைய வாய்ப்பிருக்கிறது.

(மனிதர்களின் ஏழு சக்கரங்களும் அவற்றின் அமைவிடமும்)
  1. மூலாதாரம் – முதுகெலும்பின் ஆக கடைசியில் வால் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.
  2. சுவாதிஸ்தானம் – தொப்புளிலிருந்து இரண்டு அங்குலம் கீழே அமைந்துள்ளது.
  3. மணிபூரகம் – தொப்புளுக்கும் நெஞ்சுக்கும் நடுவில் அமைந்துள்ளது.
  4. அனாகதம் – நெஞ்சு பகுதியில் இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
  5. விசுத்தி – கழுத்தில் தொண்டை குழியின் பின் அமைந்துள்ளது.
  6. ஆக்ஞை – இரு கண்களின் புருவ மத்தியில் அமைந்துள்ளது.
  7. சஹஸ்ராரம் – உச்சந்தலையின் மேற்புறம். தலையிலிருந்து ஒரு அங்குலம் மேலே அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X