சென்டாரி மலர் மருந்து

சென்டாரி மலர் மருந்து (Centaury), மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தனது சொந்த விருப்பங்களைப் புறக்கணிக்கும் நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கியப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்டாரி மலர் மருந்தின் குணாதிசயங்கள்

சென்டாரியின் குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள், மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தனது சொந்த விருப்பங்களைக் கூட புறக்கணிப்பார்கள். எளிதில் மற்றவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள்.

மற்றவர்களின் சொல்லுக்கு அமாம் சாமி போடும் நபர்களாக இருப்பார்கள். மனதளவில் பலவீனமான நபர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்காகவே அதிகம் உழைத்து சோர்வடைவார்கள். தன்னம்பிக்கை குறைவாக உள்ள நபர்களாக இருப்பார்கள்.

சென்டாரி மலர் மருந்தின் பயன்கள்

சென்டாரி மலர் மருந்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதில் தனது பலனை மறக்காமல் இருக்க உதவும். தன்னம்பிக்கையை அதிகரித்து, பிறர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டாமல், தனது சொந்த முடிவுகளை எடுக்க உதவும்.

மன உறுதியை அதிகரித்து, தனது சொந்த தேவைகளைப் புரிந்துக் கொள்ள உதவுகிறது. மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. தன்னம்பிக்கையை அதிகரித்து, நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறது.

இந்த மலர் மருந்து, மற்றவர்களுக்கு உதவுவதில் தவறில்லை, ஆனால் தன்னையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த உதவும்.

Leave feedback about this

  • Rating