பாட்ச் மலர் மருத்துவத்தின் அறிமுகம். மலர் மருத்துவத்தை மக்களுக்கு வழங்கிய டாக்டர் எட்வர்ட் பாட்ச் (Dr. Edward Bach) அடிப்படையில் ஒரு உடல் நல ஆங்கில மருத்துவராவார். அவர் தன்னிடம் வைத்தியத்துக்கு வரும் பல நோயாளிகள் மீண்டும் மீண்டும் நோய்வாய்ப் படுவதை கவனித்தார்.
மனிதர்களுக்கு மீண்டும் மீண்டும் நோய் உண்டாவதற்கும், நோய்கள் குணமாகாமல் இருப்பதற்கும் உள்ள காரணங்களை ஆராயத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து மனிதர்களின் மனம் மற்றும் உணர்வுகளை ஆராயத் தொடங்கிய அவர் கூறியதாவது:
மனிதர்களின் நோய்களுக்கு, உடல்நலம் மட்டுமல்லாமல், மனிதர்களின் உணர்வு பாதிப்பு மற்றும் உணர்ச்சி நிலையும் நோய்கள் உருவாக முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்பதை கண்டறிந்தார். பயம், கவலை, கோபம், கர்வம், மனச்சோர்வு போன்ற உணர்ச்சிகள் பல தீய விளைவுகளை உடலில் உண்டாக்குகின்றன என்பதையும் உணர்ந்தார்.
பதிக்கப்பட்ட மனிதர்களின் மனநிலையை சரி செய்வதற்காக மலர் மருத்துவம் என்ற இயற்கை மருத்துவ முறையை அவர் உருவாக்கினார்.
Leave feedback about this