ஆட்டிறைச்சியை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்குமா? ஆடு மாமிசத்தை உட்கொள்கிறதா? இல்லை அல்லவா. வெறும் இலை தழைகளை உட்கொள்ளும் ஆட்டின் உடலில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது. மாமிசம் உண்ணும் விலங்குகளின் உடலில் கொழுப்பு குறைவாக இருக்கின்றன. உணவுக்கும் உடலின் கொழுப்புக்கும் நேரடி சம்பந்தமில்லை.
மனித உடலில் இருக்கும் கொழுப்பு, உடலால் சுயமாக தன் தேவைக்காக உருவாக்கப்படுகிறதே அன்றி மனிதர்கள் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பிலிருந்து உருவாவது அல்ல.
மூளை மற்றும் கல்லீரலின் இயக்கத்துக்கு கொழுப்பு மிகவும் அவசியமானது, அதனால் மனித உடலில் கொழுப்பு இருந்து கொண்டே இருக்கும்.
ஒருவேளை உடலில் கொழுப்புச் சத்து குறைந்து போனால் மூளையின் இயக்கம் மந்தமாகும், ஞாபக சக்தி குறையும், உடலும் தன் பலத்தை இழக்கும்.
Leave feedback about this