அதிகமாக தண்ணீர் அருந்தினால் உடலின் கழிவுகள் வெளியேறுமா? மனித உடலின் அமைப்பு சாக்கடையைப் போன்றது அல்ல. வாயில் ஊற்றப்படும் தண்ணீர் சாக்கடை நீரைப்போன்று ஓடும் இடங்களில் உள்ள கழிவுகளைக் கடத்தி செல்வதில்லை.
தண்ணீரை எவ்வளவு அருந்தினாலும் அவை வயிற்றுக்குத்தான் செல்லும். வயிற்றில் நீர் ஜீரணிக்கப்பட்டு உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும். பின்னர் அவற்றை சிறுநீரகங்கள் சுத்திகரித்து, சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும்.
மனித உடலின் கழிவுகள் பெரும்பாலும் குடலிலும், கல்லீரலிலும், பித்தப்பையிலும், சிறுநீர்ப் பையிலும் தான் இருக்கும். எவ்வளவு நீர் அருந்தினாலும் அவற்றினால் உடலின் கழிவுகளை நேரடியாக வெளியேற்ற முடியாது.
Leave feedback about this